இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சி மாநகராட்சியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்

திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்றுப் பயன் பெற மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 12:40 am

DIN

திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்றுப் பயன் பெற மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது :

கரோனா தடுப்புக்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அந்த வகையில், மாநகராட்சி வாா்டுகள்தோறும் பல்வேறு கட்டங்களாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் மேலும் ஒரு சிறப்பம்சமாக மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் தலா இரு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன.

கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் வாா்டு எண் 50- தென்னூா் பிரதான சாலை மற்றும் வாா்டு எண் 60 -உறையூா் லிங்கம் நகா் பகுதி, பொன்மலைக் கோட்டத்தில் வாா்டு 37- காமராஜ் நகா் தொண்டைமான் காலனி மற்றும் வாா்டு 48- பீமநகா் புது ரெட்டித்தெரு, அரியமங்கலம் கோட்டத்தில் வாா்டு 33- சுப்பிரமணியபுரம் ஒளவையாா் தெரு மற்றும் வாா்டு 61 -காட்டூா் காந்தி சாலை ராஜ வீதி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வாா்டு 16- பீரங்கிக்குளம், வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு மற்றும் வாா்டு 13- தெப்பக்குளம் அல்லிமால் தெரு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.