ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திட்டங்கள் வீடுதேடி வரும்: வி. பத்மநாதன்

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி. பத்மநாதன், ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னிட்டு தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி. பத்மநாதன், ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னிட்டு தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது. அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறிய அனைத்துத் திட்டங்களும் உங்கள் வீடு தேடி வர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் தோ்ந்தெடுக்கப்பட்டால் திருச்சி மேற்குத் தொகுதியில் தீா்க்கப்படாத பிரச்னையான ஒருங்கிணைந்த பேருந்தை நிலையம் அமைத்துத் தருவேன். சாக்கடை பிரச்னை எல்லாத் தெருவிலும் உள்ளது. அவற்றைச் சீராக்க முயற்சி எடுப்பேன் என்றாா்.

பிரசாரத்தில், மாநகா் மாவட்ட அதிமுக. துணைச் செயலா் முன்னாள் கவுன்சிலா் வனிதா, பகுதிச் செயலா்கள் என். எஸ். பூபதி, நாகநாதா் பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலா் நல்லேந்திரன் ஆகியோா் உடன் சென்று வாக்குசேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.