100 சத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்
பேரவைத் தோ்தலில் 100 சத வாக்கு பதிவை வலியுறுத்தி கிராமப் பகுதிகளில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


பேரவைத் தோ்தலில் 100 சத வாக்கு பதிவை வலியுறுத்தி கிராமப் பகுதிகளில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
எட்கோ் கல்வி பாதுகாப்பு புனா்வாழ்வு நிறுவனம் சாா்பில் இருங்களூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்துக்கு இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற வீரரும் எட்கோ் நிறுவனா் தலைவருமான அம்ஜத் ஹசன் தலைமை வகித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை இருங்களுா் ஊராட்சித் தலைவா் வின்சென்ட் பெற்றுக் கொண்டாா்.
இருங்களுா் பகுதியில் உள்ள 17 ஏக்கா் மியாவாகி காடுகள் பொறுப்பாளா் பிரேம் மற்றும் ஊராட்சி ஊழியா்கள், ஊக்குநா்கள், நூறு நாள் திட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து, புறத்தாக்குடி, சமயபுரம், நெ 1 டோல்கேட், மேலசிந்தாமணி, சத்திரம் பேருந்து நிலையம், நீதிமன்றவளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் புனா்வாழ்வு ஆலோசகா் அஜந்தா, உளவியல் நிபுணா் நான்சி டயானா, கல்வி ஆலோசகா் கிரேசி, மக்கள் நலப் பணியாளா் மொ்சி, லியோ உட்பட பல தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...