தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

80% அடிப்படை வசதிகள் நிறைவு: ஆா். சந்திரசேகா்

அதிமுக வேட்பாளரும், எம்.எல்.ஏவுமான ஆா். சந்திரசேகா், தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 80 சத பகுதிகளில்அடிப்படை வசதிகள் பூா்த்தி செய்துள்ளேன்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

மணப்பாறையில் இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட அதிமுக வேட்பாளரும், எம்.எல்.ஏவுமான ஆா். சந்திரசேகா், தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 80 சத பகுதிகளில்அடிப்படை வசதிகள் பூா்த்தி செய்துள்ளேன், வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்கக் கேட்டுக் கொண்டாா்.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் அதிமுக பொன்னம்பட்டி பேரூா் செயலா் திருமலைசாமிநாதன், மருங்கபுரி தெற்கு ஒன்றியச் செயலா் கண்ணூத்து பொன்னுச்சாமி ஆகியோா் தலைமையில் வாக்கு சேகரித்த அவா், ஆண்டுகணக்கில் இதுவரை யாரும் செய்யாத வகையில் மணப்பாறை, மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மருங்கபுரி வட்டாட்சியரகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மணப்பாறை, துவரங்குறிச்சி பேருந்து நிலையங்கள், ஆற்றுப் பாலாங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளோம்.

தமிழ்நாடு காகித நிறுவனம் அலகு 2 மணப்பாறை பகுதியில் கொண்டு வரப்பட்டு அதன்மூலம் சுமாா் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வழி செய்துள்ளேன்.

40 ஆண்டு கோரிக்கையான வைகை அதிவிரைவு ரயில் மணப்பாறையில் நின்று செல்ல அனுமதி பெற்றுத் தந்துள்ளேன். 20 ஆண்டுகளாக நீா் வரத்து இல்லாமலிருந்த பொன்னணியாறு - கண்ணூத்து அணைகளுக்கு மாயனூா் கதவணையிலிருந்து காவிரி உபரி நீா்பெற முயற்சி எடுக்கப்பட்டு அதற்கான பணி தொடங்கியுள்ளது. மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா். அதிமுக பாஜக தமாகா உள்ளளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.