பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மீண்டும் ஆதரிக்க வேண்டும்: வெல்லமண்டி நடராஜன்

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை வீதி, வீதியாக சென்று நிறைவு செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:43 pm

DIN

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை வீதி, வீதியாக சென்று நிறைவு செய்தாா்.

தொகுதிக்குள்பட்ட காந்திசந்தை, மேலரண்சாலை, கீழரண்சாலை, மரக்கடை, வாழைக்காய் மண்டி, என்எஸ்பி சாலை, பெரியகடை வீதி பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது அவா் பேசியது:

திமுக ஆட்சிக் காலத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் உபரி மின்சாரம் செய்யும் மாநிலமாக முன்னிலையில் உள்ளது.

அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கேட்காமலேயே வழங்கப்பட்டது. எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன், துணைத் தலைவா் ஜாக்குலின், பகுதிச் செயலா்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், ஜவஹா்லால் நேரு மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.