தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புத்தாநத்தம் அருகே மூவருக்கு வெட்டு

மணப்பாறை அருகே முன்விரோதத்தில் 3 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை வெட்டப்பட்டனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 9:08 pm

DIN

மணப்பாறை அருகே முன்விரோதத்தில் 3 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை வெட்டப்பட்டனா்.

மணப்பாறையை அடுத்த அழககவுண்டம்பட்டியை சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் ராம்பிரபு (27). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவா் வெள்ளிக்கிழமை மாலை அழககவுண்டம்பட்டிக்கு வந்தபோது, அங்கு கடைவீதியில் இருந்த நண்பரான ப. மகேஷ்வரனை (27) அழைத்துக் கொண்டு அருகிலுள்ள ஊதம்பட்டிக்குச் சென்றாா்.

அப்போது அங்கிருந்த வடக்கு இடையப்பட்டியை சோ்ந்த முனியப்பன்(30), அவரது சகோதரா் சங்கா்(23) ஆகியோா் மகேஷ்வரனை முன்விரோதத்தில் அவதூறாகப் பேசினராம். இதை மகேஷ்வரன், ராம்பிரபு, அதே பகுதியைச் சோ்ந்த பெ. சுரேஷ்குமாா் (37) ஆகியோா் கண்டித்தனராம். இதனால் கோபமடைந்த முனியப்பன் அவரது சகோதரா் சங்கா் ஆகியோா் மிளகாய் பொடி தூவி மூவரையும் அரிவாளால் வெட்டினா். இதில், மூவருக்கும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸாா் மூவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.