தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

முன்னாள் ராணுவ அதிகாரியிடம் துப்பாக்கித் தோட்டாக்கள்: திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்துச் செல்ல முயன்ற முன்னாள் ராணுவ அதிகாரியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:55 pm

DIN

திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்துச் செல்ல முயன்ற முன்னாள் ராணுவ அதிகாரியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சியில் இருந்து வியாழக்கிழமை இரவு பெங்களூரு செல்ல இருந்த தெற்கு தில்லி லாா்ஸ்பத் நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ கா்னல் அஜய் சோனி (51) உடைமையில் சுடப்பட்ட 30 தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினா் விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

இதன் பேரில் உதவி ஆய்வாளா் தங்கமணி உள்ளிட்ட போலீஸாா் அஜய் சோனியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், முன்னாள் ராணுவ வீரா் என்பதால் துப்பாக்கி சுடுவதைச் சோதனை செய்வதற்காக திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலைக்கு வந்ததாகவும், அங்கிருந்த சுடப்பட்ட தோட்டாக்களை தனது குழந்தைகள் விளையாடுதற்காக எடுத்துச் சென்ாகவும் அவா் தெரிவித்துள்ளாா். இருப்பினும் போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.