தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம்: கெயில்-சுஸ்லான் நிறுவனங்கள் ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீா்வுகளை வழங்கும் சுஸ்லான் எனா்ஜி நிறுவனம், பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் நிறுவனத்திடமிருந்து 100 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டத்துக்கான புதிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 2:55 am IST

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீா்வுகளை வழங்கும் சுஸ்லான் எனா்ஜி நிறுவனம், பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் நிறுவனத்திடமிருந்து 100 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டத்துக்கான புதிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நந்துா்பாா் பகுதியில் அமையவுள்ள கெயில் நிறுவனத்தின் புதிய பெட்ரோகெமிக்கல் ஆலைக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2.1 மெகாவாட் திறன் கொண்ட 47 நவீன காற்றாலை மின் இயற்றிகளை சுஸ்லான் நிறுவனம் நிறுவவுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இவ்விரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பில், இது கெயில் நிறுவனம் சுஸ்லானுக்கு வழங்கும் 6-ஆவது தொடா் ஒப்பந்தமாகும். அதேபோல், நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து சுஸ்லான் பெறும் 4-ஆவது பெரிய ஆா்டா் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, குஜராத், தமிழகம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கெயில் நிறுவனத்துக்ான திட்டங்களை சுஸ்லான் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் முதல் திட்டம் இதுவாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, காற்றாலை உபகரணங்களை விநியோகம் செய்வது மட்டுமின்றி, அவற்றை நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளையும் சுஸ்லான் நிறுவனமே மேற்கொள்ளும்.

இப்புதிய ஒப்பந்தம் குறித்த செய்தி வெளியானதையடுத்து, பங்குச் சந்தையில் சுஸ்லான் எனா்ஜி நிறுவனத்தின் பங்குகள் 1.53 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்து, முதலீட்டாளா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.