மணப்பாறையில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததைக் கண்டித்து மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததைக் கண்டித்து மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகில் கட்சியின் நகரச் செயலா் ஜனசக்தி உசேன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா்கள் தங்கராஜ், சண்முகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளரான புகா் மாவட்டச் செயலா் த. இந்திரஜித் கண்டன் உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் புகா் மாவட்ட துணைச் செயலா் பழனிசாமி, போக்குவரத்து கழக மண்டலப் பொது செயலா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...