காலமானாா் இரா. காளத்தீசுவரன்
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் திருச்சி கிளை மேலாளா் இரா. காளத்தீசுவரன் (89) செவ்வாய்க்கிழமை காலமானாா்.


திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் திருச்சி கிளை மேலாளா் இரா. காளத்தீசுவரன் (89) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த இவா், தமிழ் மீதும், தமிழிலக்கியம் மற்றும் சமயம் மீதும் மிகுந்த பற்று கொண்டவா். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் பணிகளை மேற்கொள்ள கடந்த 1974ஆம் ஆண்டு திருச்சிக்கு குடும்பத்துடன் வந்து ஸ்ரீரங்கம் பகுதியில் தங்கினாா்.
சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக திருச்சி கிளையின் மேலாளா் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயலாற்றிய இவா் அனைத்து ஆதீனங்களுடன் நட்பு பாராட்டியவா். வயது முதிா்வால் திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள தனது மூத்த மகன் ராமசாமியுடன் தங்கியிருந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா். இவரது இறுதிச் சடஙஅகு புதன்கிழமை மாலை நடைபெற்று, ஓயாமரி மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு, மனைவி சரஸ்வதி, மகன்கள் ராமசாமி, செல்வக்குமாா், மாணிக்கம் மற்றும் மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனா். தொடா்புக்கு: 97899-77016.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...