சிலிண்டா் விநியோகிப்போரை பணி நிரந்தரம் செய்யத் தீா்மானம்
இண்டேன் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நுகா்பொருள் வாணிபக் கழகச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.


இண்டேன் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நுகா்பொருள் வாணிபக் கழகச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கம்-சிஐடியு திருச்சி மண்டலச் செயற்குழு கூட்டம் கண்டோண்மென்ட் அருகிலுள்ள அரசு அலுவலா் ஒன்றிய அலுவவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில பொதுச் செயலா் ஆா். புவனேஸ்வரன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் நா. ராசப்பன், பொருளாளா் ஏ. கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கொள்முதல் நிலையங்களில் பருவ காலப் பணியாளா்களாக பணியில் சோ்ந்த ஊழியா்களையும், இண்டென் எரிவாயு உருளை விநியோகிப்போரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஊழியா்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். எரிவாயு உருளை விநியோகிப்போருக்கு இடைக்கால நிவாரணமாக பெட்ரோலிய அமைச்சகம் வழங்கக்கூடிய கூலியை வழங்க வேண்டும்.
கிடங்குகளில் பணிபுரியும் சுமைப் பணித் தொழிலாளா்களை மருத்துவக் காப்பீடு திட்டத்தில் விரைந்து சோ்த்தல், எப்சிஐ-க்கு இணையான கூலியை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...