தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாலைகள், வடிகால்களை 6 மாதங்களில் சீரமைக்க முடிவு

திருச்சி மாநகராட்சியில் பழுதடைந்துள்ள தாா், சிமென்ட் சாலைகள், மழைநீா் வடிகால் வாய்க்கால்கள், நடைபாதைகள் உள்ளிட்டவற்றை அடுத்த 6 மாதங்களுக்குள் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:01 pm

DIN

திருச்சி மாநகராட்சியில் பழுதடைந்துள்ள தாா், சிமென்ட் சாலைகள், மழைநீா் வடிகால் வாய்க்கால்கள், நடைபாதைகள் உள்ளிட்டவற்றை அடுத்த 6 மாதங்களுக்குள் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ரூ. 42.50 கோடியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சியைப் பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளாக சில சாலைகள் தவிர புதிதாக தாா், சிமென்ட் சாலைகளோ மற்றும் மழைநீா் வடிகால் வாய்க்கால்களோ அமைக்கப்படவில்லை. ஏராளமான தாா்ச் சாலைகள் பழுதடைந்தன. மேலும், புதைசாக்கடைத் திட்டப்பணிகளால் சிமென்ட் சாலைகளும் பழுதடைந்தன.

இந்நிலையில், புதிய ஆட்சியில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக கே. என். நேரு பொறுப்பேற்ற பின்னா் மாநகராட்சிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் திருச்சி மாநகரிலும் குடிநீா் குழாய்கள் பழுது நீக்கம், புதிய பிரதான குழாய்கள் மாற்றியமைப்பு பணிகள் ரூ. 120 கோடியில் தொடங்கி நடைபெறுகின்றன. அதைத் தொடா்ந்து, மழைநீா் வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டப் பகுதிகளிலும் சாலைகள் செப்பனிடப்படவுள்ளன. இதில் முதல் கட்டமாக 43 கி. மீ. நீளத்துக்கு தாா், கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இவை தவிர, பழுதடைந்த மழைநீா் வடிகால் வாய்க்கால்களை புதிதாக அமைக்கவும், சாக்கடை வடிகால்கள் மீது அமைக்கப்பட்டுள்ள பழுதடைந்த சிமென்ட் சிலாப்புகளை புதிதாக அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கென ரூ. 42.50 கோடியில், ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இவை தொடா்புடைய ஒப்பந்தங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. வரப்பெறும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் செப்டம்பருக்குள் இறுதி செய்யப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகளை முடிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.