வாய்க்காலில் மூழ்கி சலூன் கடைக்காரா் பலி
திருச்சியருகே வாய்க்காலில் குளித்த சலூன் கடை உரிமையாளா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.


திருச்சியருகே வாய்க்காலில் குளித்த சலூன் கடை உரிமையாளா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (27). சலூன் கடை வைத்துள்ள இவா் வியாழக்கிழமை, ஜீயபுரம் கொடியாலம் அருகேயுள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் மணற்போக்கி பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்தாா்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா். நண்பா்களால் அவரை மீட்க முடியவில்லை. தகவலின்பேரில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினா் அருணை சடலமாக மீட்டனா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...