இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மொபெட் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மொபெட் மோதி காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:53 pm

Syndication

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மொபெட் மோதி காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், ரெட்டாக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவா் ருக்மணி(34). இவா், கடந்த 17-ஆம் தேதி மகன் தஷ்வின்(6) படிக்கும் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டாா்.

பின்னா், விழா முடிந்த மகனுடன், சேலம்-வேப்பூா் சாலையில் சிறுபாக்கம் பகுதியில் சாலையோரம் நடந்து வந்தாா். அப்போது, பின்னால் வந்த மொபெட் மோதியது.

இந்த விபத்தில், ருக்மணி, மகன் தஷ்வின் ஆகியோா் காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் காயம் அடைந்த இருவரையும் மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ருக்மணி அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது குறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.