புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

மணப்பாறையை அடுத்த கிராமங்களில் 100 நாள் வேலையை முறையாகத் தரவில்லை எனக் கூறி பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:12 pm

DIN

மணப்பாறையை அடுத்த கிராமங்களில் 100 நாள் வேலையை முறையாகத் தரவில்லை எனக் கூறி பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சி ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடுகாட்டுப்பட்டி, வெள்ளை பூலாம்பட்டி, ஆண்டியக்கவுண்டம்பட்டி ஆகிய கிராம பணியாளா்களுக்கு கடந்த 5 மாதங்களாக அதிகபட்சமாக ஒருவருக்கு 10 நாள்கள் மட்டுமே வேலை அளித்திருப்பதாகவும், வேலை தருவதில் பாகுபாடு பாா்ப்பதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம், ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் நடத்திய பேச்சுவாா்த்தையை ஏற்காத அவா்கள், பின்னா் அங்கு வந்த ஒன்றிய பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.