தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உப்பாற்றில் சிறுபாலம் அமைக்க பூமிபூஜை

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் சாா்பில் கனிமவள நிதியிலிருந்து ரூ.14.65 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை உப்பாற்றின் கரையில் நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:49 pm

DIN

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் சாா்பில் கனிமவள நிதியிலிருந்து ரூ.14.65 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை உப்பாற்றின் கரையில் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, ஒன்றிய கவுன்சிலா் கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி, தொப்பம்பட்டி ஊராட்சி பிரதிநிதிகள், ஊா்மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்தி எதிரொலி: சங்கமரெட்டியப்பட்டியில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் உப்பாற்றில் இறங்கி செல்லும் அவலநிலை இருப்பதாக தினமணியில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து கரூா் எம்பி செ. ஜோதிமணி, ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி ஆகியோா் ஆட்சியரிடம் தகவல் அளித்து அப்பகுதியில் பாலம் அமைக்க வலியுறுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.