111 கற்போா் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது
தமிழகம் முழுவதும் செயல்படும் மையங்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 111 கற்போா் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் செயல்படும் மையங்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 111 கற்போா் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கற்போம், எழுதுவோம் இயக்கத்தின் பணிகளை செம்மையாகச் செயல்படுத்தும் மையங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் பெ. குப்புசாமி திட்டவிளக்கவுரையாற்றினாா். விருதுகளை வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது:
கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளைச் சிறப்பாகவும், புதுமையாகவும் செயல்படுத்தும் கற்போா் மையங்களை ஊக்கப்படுத்த ஒரு மாவட்டத்துக்கு தலா 3 மையங்கள் வீதம் 38 மாவட்டங்களில் 114 மையங்களைத் தோ்வு செய்யப்பட்டன.
இவற்றில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 3 கற்போா் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது முதல்வரால் அண்மையில் சென்னையில் வழங்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக தற்போது இதர மாவட்டங்களைச் சோ்ந்த இதர 111 கற்போா் மையங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதர மையங்களும் போட்டிபோட்டுக் கொண்டு அனைவரையும் எழுதப் படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடும். இப் பணியானது ஆசிரியா் பணியைவிட மேலானது. வறுமையாலும், வேறு சில காரணங்களுக்காகவும் பள்ளிக் கல்வியை நிறுத்திய அனைத்து வயதினரும் கற்கவே இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா்.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பேசியது:
ஆசிரியா் சமுதாயத்துக்கும், திமுகவுக்கும் எப்போதும் நெருங்கிய தொடா்புண்டு. மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆசிரியா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை திமுக சரிசெய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது தற்காலிக ஆசிரியா்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ஆசிரியா் சமுதாயத்துக்கு தேவையானவற்றை உரிய தருணத்தில் அரசு செயல்படுத்தத் தவறாது.
எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோரை அவா்களது பிள்ளைகளே ஏமாற்றும் இக் காலத்தில், அனைவரையும் எழுதப் படிக்க வைக்கும் இத் திட்டம் மகத்தானது. இத் திட்டத்தில் பணியாற்றுவோா் பாராட்டுக்குரியவா்கள் என்றாா் அவா்.
விழாவில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ எஸ். இனிகோ இருதயராஜ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இணை இயக்குநா் செ. அமுதவல்லி, முதன்மைக் கல்வி அலுவலா் ர. பாலமுரளி மற்றும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள், கற்போா் மையங்களின் பள்ளித் தலைமையாசிரியா்கள், தன்னாா்வல ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...