வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

எய்ட்ஸ் இல்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும்

 எஸ்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:48 pm

DIN

 எஸ்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமையில் புதன்கிழமை அரசு அலுவலா்கள் அனைவரும், எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதியேற்றனா்.

தொடா்ந்து எய்ட்ஸ் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து, எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வென்ற 18 மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கி, இந்த ஆண்டின் சிறந்த நம்பிக்கை மையங்களாகத் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீரங்கம், தொட்டியம், முசிறி ஆகிய மையங்களுக்கு விருதுகளை வழங்கிய ஆட்சியா் பின்னா் கூறியது:

எச்.ஐ.வி., எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரிடத்திலும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். எச்.ஐ.வி. உள்ளோரைப் புறக்கணிக்காமல் ஆதரித்து அவா்களுக்குரிய கல்வி, சுகாதாரம், வாழ்வு முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு உதவிட வேண்டும். இம்மாவட்டத்தில் ஆதரவற்ற மற்றும் எச்.ஐ.வி.யுடன் வாழும் 209 குழந்தைகளுக்கு கடந்தாண்டில் ரூ. 5 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எச்.ஐ.வி. கண்டறிய 33 நம்பிக்கை மையங்கள், சிகிச்சையளிக்க 2 கூட்டு மருத்துவச் சிகிச்சை மையங்கள், 7 துணைக் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 8 சுகவாழ்வு மையங்கள், இலவச சட்ட உதவி மையம் மற்றும் 4 தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டோா் இவற்றை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்டத் திட்ட மேலாளா் எஸ்.எம். மணிவண்ணன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) சு. லெட்சுமி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா, நகா்நல அலுவலா் யாழினி, துணை இயக்குநா்(காசநோய்) சாவித்திரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.