433 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 433 குடும்பத்தினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.


திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 433 குடும்பத்தினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். விழாவில் இலங்கைத் தமிழா் குடும்பத்தினருக்கு பாத்திரம், துணிகள் மற்றும் இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது:
இலங்கைத் தமிழா்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ரூ.317 கோடி ஒதுக்கி பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தாா்.
தமிழகம் முழுவதும் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இலங்கைத் தமிழா் பிரச்னையில் பல்வேறு தியாகங்களை திமுக செய்துள்ளது என்றாா் அமைச்சா்.
விழாவில், திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ எஸ். இனிகோ இருதயராஜ், தனித்துணை ஆட்சியா் (அகதிகள் முகாம்) ஜமுனாராணி, முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...