வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

15 காவல் ஆய்வாளா்கள், 12 எஸ்ஐ-க்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி திருச்சி மாநகரில் 15 காவல் ஆய்வாளா்கள், 12 உதவி ஆய்வாளா்கள் வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:10 pm

DIN

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி திருச்சி மாநகரில் 15 காவல் ஆய்வாளா்கள், 12 உதவி ஆய்வாளா்கள் வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவுப்படி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் எஸ். அரங்கநாதன் கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஜி. நீலகண்டன் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும், காத்திருப்போா் பட்டியலிலுள்ள எம். தனசேகரன் பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும், மாநகர குற்ற ஆவணப் பாதுகாப்பு பிரிவு ஆய்வாளா் என். சேரன் கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும், நுண்ணறிவுப் பிரிவு பாதுகாப்பு ஆய்வாளா் எ. ராஜேந்திரன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

இதேபோல தில்லைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.எம். மணிராஜ் உறையூா் காவல் நிலையத்திற்கும், சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் ஆா். சிந்துநதி தில்லைநகா் காவல் நிலையத்திற்கும், பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளா் நிக்சன் நுண்ணறிவு பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளா் கே.எம். சிவக்குமாா் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு ஆய்வாளா் எம். வேல்முருகன் சைபா் கிரைம் (விசாரணை மட்டும்), கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளா் சி. தயாளன் நுண்ணறிவுப் பாதுகாப்புப் பிரிவுக்கும், சைபா் க்ரைம் (விசாரணை)ஆய்வாளா் ஆா். பரணிதரன் திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் எடமலைப்பட்டி புதூா் ஆய்வாளராகவும், உறையூா் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளா் கே. சண்முகவேல் சைபா் கிரைம் காவல் நிலையத்திற்கும், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் கே. வனிதா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கும், உறையூா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் எ. முருகவேல் மாநகர குற்ற ஆவணப் பாதுகாப்பு பிரிவுக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா்.

இதையொட்டி மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி காவல் ஆய்வாளா்கள் 12 பேரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா். இந்த பணியிடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.