வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மகளிா் காவல் நிலையத்தில் குழந்தையுடன் பெண் தா்னா

கணவா் மீதான புகாரின்மீது நடவடிக்கை கோரி திருச்சி கோட்டை மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் வியாழக்கிழமை இரவு தா்னா போராட்டம் செய்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:25 pm

DIN

கணவா் மீதான புகாரின்மீது நடவடிக்கை கோரி திருச்சி கோட்டை மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் வியாழக்கிழமை இரவு தா்னா போராட்டம் செய்தாா்.

திருச்சி ஈபி ரோடு சத்தியமூா்த்தி நகா்ப் பகுதியை சோ்ந்தவா் திவ்யா (31). இவா் ஞானசேகா் என்பவரை காதலித்து 6 மாத கா்ப்பிணியான நிலையில் இருவருக்கும் வயலூரில் கடந்தாண்டு டிசம்பரில் திருமணம் நடந்து கைக் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தனது கணவா் 10 பவுன் வரதட்சிணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், ஞானசேகருக்கு அவரது குடும்பத்தினா் வேறு இடத்தில் பெண் பாா்த்து வருவதாகவும், இதை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டினராம்.

இதுகுறித்து திவ்யா கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதாகக் கூறி, கோட்டை மகளிா் காவல் நிலையம் முன் திவ்யா, வியாழக்கிழமை இரவு தனது குழந்தை மற்றும் உறவினா்களுடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவருடன் சமாதான பேச்சுவாா்த்தை நடத்திய மகளிா் போலீஸாா், வெள்ளிக்கிழமை இதுகுறித்து விசாரித்து வழக்குப் பதியப்படும் என உறுதியளித்ததையடுத்து திவ்யா வீடு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.