அங்கன்வாடி சிறாா்களுக்கு ரத்தசோகை கண்டறியும் பணி
மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கான ரத்த சோகை நோய் கண்டறியும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.


மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கான ரத்த சோகை நோய் கண்டறியும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வரும் நாள்களில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகரிக்கவும், ரத்த சோகை ஏற்படாமல் இருக்கவும், நாள் ஒன்றுக்கு 50 கிராம் என இரண்டு சிகப்பு அவில் உருண்டைகளை 6 மாதத்துக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் முன்னோடித் திட்டமாக வையம்பட்டி வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரத்த மாதிரி எடுக்காமல், பிரேத்யேக கருவி கொண்டு நாடித் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது.
வையம்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷாஹிதா ரிஸ்வான ஒருங்கிணைந்து நடத்திய முகாமை வட்டார மருத்துவ அலுவலா் ஜெயலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேவதி, பாபு அண்ணாதுரை, பள்ளிச் சிறாா் நல்வாழ்வுத் திட்ட மருத்துவா் ஜான்சன்துரை ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வையம்பட்டி, அந்தநல்லூா் வட்டார பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் வையம்பட்டி வட்டாரத்தில் 220 குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...