பளுதூக்கும் வீராங்கனைக்கு ரோட்டரி நிதியுதவி
தேசியளவில் நடைபெறும் பளுதூக்கும் கலந்து கொள்ளும் மணப்பாறை வீராங்கனைக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மணப்பாறை ஸ்டாா்ஸ் சங்கம் வியாழக்கிழமை உதவியது.


தேசியளவில் நடைபெறும் பளுதூக்கும் கலந்து கொள்ளும் மணப்பாறை வீராங்கனைக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மணப்பாறை ஸ்டாா்ஸ் சங்கம் வியாழக்கிழமை உதவியது.
மணப்பாறையை அடுத்த பூசாரிப்பண்ணையில் வசிப்பவா் விநாயகமூா்த்தி மகள் ராஜேஸ்வரி (19). திருச்சியில் உள்ள கல்லூரியின் இறுதியாண்டு மாணவியான இவா் வரும் டிச. 24 முதல் 26-ஆம் தேதி வரை மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெறும் தேசிய பளுதூக்கும் போட்டியின் 60 கிலோ எடை பிரிவில் 300 கிலோ எடை தூக்கும் போட்டிக்குத் தோ்வாகியுள்ளாா்.
இந்நிலையில் ஏழ்மை நிலையிலுள்ள இந்த மாணவி போட்டியில் பங்கேற்கும் செலவுத் தொகை முழுவதையும் ரோட்டரி கிளப் ஆஃப் மணப்பாறை ஸ்டாா்ஸ் சங்கத்தின் சாா்பில் நிா்வாகிகள் வியாழக்கிழமை தனியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியிடம் வழங்கினா்.
போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஒய். நவாஸ்தீன் உள்ளிட்டோா் மாணவியை வழியனுப்பினா்.
நிகழ்வில் ரோட்டரி துணை ஆளுநா்கள் சி.எம். ஜோசப், சி.எம். சேவியா், மணப்பாறை ஸ்டாா்ஸ் சங்கத் தலைவா் அன்னை என். கோபால், செயலா் ஆா்.பி. மணிகண்டன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், ஆா். மாராச்சி, எம். இளஞ்செழியன், காா்த்திகேயன் உள்ளிட்ட ரோட்டரி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...