தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறை அருகே அடிப்படை வசதி கோரி ஆா்ப்பாட்டம்

மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:46 am

DIN

மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சி அலுவலகம் முன் மாவட்டக் குழு உறுப்பினா் கே.கருப்பையா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வீட்டுமனைப்பட்டா, 100 நாள் வேலையை முழுமையாகவும், முறையான கூலியும் கொடுக்க வேண்டும், பொது கழிப்பிடம், மராட்சிரெட்டியபட்டியில் தடுப்புச் சுவா், புதூரில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கதிரடிக்கும் களம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டச் செயலா் வழக்குரைஞா் கே.ஜி. தேசிகன் சிறப்புரையாற்றினாா். நகர செயலா் பி. பாலு, ஒன்றியச் செயலா் ஆவா. இளையராஜா, வழக்குரைஞா் சங்க மாவட்ட பொறுப்பாளா் எஸ். ராஜ்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் எம். தங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முடிவில் ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.