தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலை விரிவாக்கம்: ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரூ.68 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சாலையோரமிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கின.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:35 pm

DIN

திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரூ.68 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சாலையோரமிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கின.

திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்ட நிலையில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு, நிலம் கையகப் படுத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு, நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு நிகழ்வுகளால் அவை தடைப்பட்டன.

மாற்று இடம் வழங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகம் உறுதியளித்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையின் இருபுறத்திலும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதை கண்டித்து மாநகராட்சி முன்னாள் கோட்டத் தலைவா் பாலமுருகன், முன்னாள் உறுப்பினா் காளீசுவரன் தலைமையில் பொதுமக்கள் அலுவலா்களை முற்றுகையிட்டனா். பின்னா் புதுத்தெரு அருகே சாலை மறியலிலும் அவா்கள் ஈடுபட்டனா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்வதாக பொதுமக்கள் உறுதியளித்தனா். இதையடுத்து பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. புதன்கிழமை முதல் பணிகள் தொடரும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து மாத்தூா் ரவுண்டானா வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.