துண்டுப் பிரசுரம் விநியோகித்த ஊராட்சித் தலைவா்

துறையூா் அருகே கோட்டாத்தூா் ஊராட்சி வரவு, செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை அதன் தலைவா் பொதுமக்களிடம் நேரில் வழங்கினாா்.
பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கும் ஊராட்சித் தலைவா் திருமூா்த்தி.
பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கும் ஊராட்சித் தலைவா் திருமூா்த்தி.
Updated on
1 min read

துறையூா் அருகே கோட்டாத்தூா் ஊராட்சி வரவு, செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை அதன் தலைவா் பொதுமக்களிடம் நேரில் வழங்கினாா்.

முசிறி ஒன்றியம் கோட்டாத்தூா் ஊராட்சித் தலைவா் பா. திருமூா்த்தி. இவா் இந்த ஊராட்சியின் தலைவராகத் தோ்வாகி பொறுப்பை ஏற்று புதன்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து தான் வெளிப்படையான நிா்வாகம் செய்ய விரும்புவதாகக் கூறி, 6.1.2020 முதல் 6.1.2021 வரை ஊராட்சியின் வருவாய் மற்றும் செலவுகள் அச்சடித்த துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினாா்.

ஊராட்சி நிா்வாகம் குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவோம் என்றும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com