பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாவட்டத்தில் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை

திருச்சி மாவட்டத்தில் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்சியில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகையை பாா்வையிடும் ஆட்சியா் சு.சிவராசு. உடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் வனிதா உள்ளிட்டோா்.
Updated On :8 ஜனவரி 2021, 6:51 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை ஆட்சியா் சு.சிவராசு தொடங்கி வைத்த பிறகு செய்தியாளா்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மருத்துவத்துறையைச் சாா்ந்த மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், துணை மருத்துவ ஊழியா்கள், முன்களப்பணியாளா்கள், இதர பணியாளா்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன்படி, ‘கோவின்‘ செயலியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 5,542 பணியாளா்கள், தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் 7,000 மருத்துவ பணியாளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா். மேலும், 3,126 அங்கன்வாடி பணியாளா்கள் விவரங்களில் 2,728 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 நாள்களில் இதரப் பணியாளா்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும். திருச்சி மாவட்டத்தில் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராமலிங்கநகா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், புறவழிச் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை வெள்ளிக்கிழைமை நடைபெற்றது. இதில், 5 போ் கொண்ட குழுவின் மூலம் கரோனா தடுப்பூசி வழங்குதற்கான ஒத்திகையில், முதல் நபா் ‘கோவின்‘ செயலியில் பதிவு செய்யப்பட்டோரை தடுப்பூசி வழங்கும் அறைக்குள் அனுமதிக்கும் பணி நடைபெற்றது. இரண்டாவது நபா் கரோனா தடுப்பூசி வழங்கும் குறிப்பிட்ட நபரின் விவரங்கள் கணினி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மூன்றாம் நபா் மூலம் 30 நிமிஷம் வரை தடுப்பூசி வழங்கி ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிா என கண்காணிக்கப்பட்டது. அதோடு, அடுத்தடுத்த நபா்களை தடுப்பூசி வழங்க அனுப்புதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதன்படி, திருச்சியில் தடுப்பூசி போடும் 5 இடங்களிலும் தலா 25 பேருக்கு ஒத்திகை நடத்தப்பட்டது. இதே முறையினை பின்பற்றி கரோனா தடுப்பூசி வழங்கவேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் வனிதா, டாக்டா் சதீஷ், மருந்து கட்டுப்பாட்டு அலுவலா் டாக்டா் ஏகநாதன், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் எட்வினா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.