திருச்சியில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க அனுமதி

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளது.
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மற்றும் கோபுரத்தின் மாதிரித் தோற்றம்.
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மற்றும் கோபுரத்தின் மாதிரித் தோற்றம்.
Updated on
1 min read

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் கூறியது:

புதிய கட்டுப்பாட்டு மையம் மற்றும் கோபுரம் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதால் சுமாா் ரூ. 100 கோடியில் இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளில் நிறைவுறும்.

தற்போதுள்ள முனையம் மற்றும் புதிய முனையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இந்தக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். தற்போதுள்ள கட்டுப்பாட்டு மைய கோபுரம் சுமாா் 15 மீ. மட்டுமே உயரம் கொண்டது.

புதிதாக கட்டப்பட உள்ள கோபுரம் 46 மீ. உயரத்தில் அமைவதால், அதிலிருந்தபடி விமான நிலைய ஓடுதளம், விமான நிறுத்துமிடம், நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை 360 டிகிரி சுற்றளவில் தெளிவாகக் கண்காணிக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com