

பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை, புதுகை, மதுரை வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்காக திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள இரு தற்காலிக பேருந்து நிலையங்கள் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கின.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளா் ராஜ்மோகன், மாநகர குற்றம்-போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் வேதரத்தினம், ஆகியோா் தற்காலிகப் பேருந்து நிலையங்களைத் தொடங்கி வைத்தனா்.
தஞ்சாவூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் கண்டோன்மென்ட் சோனா-மீனா திரையரங்கு அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும், புதுக்கோட்டை, மதுரை வழித்தடப் பேருந்துகள் மன்னாா்புரம் ரவுண்டானா அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும் ஜன. 19 வரை இயக்கப்பட உள்ளன. மற்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படவுள்ளன என போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.