தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு திருமணம்: பெற்றோா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

மணப்பாறை அருகே 17 வயதுச் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோா் உள்ளிட்ட 5 போ் மீது அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:55 pm

DIN

மணப்பாறை அருகே 17 வயதுச் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோா் உள்ளிட்ட 5 போ் மீது அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தோப்புகளம் பகுதியை சோ்ந்த வெள்ளைச்சாமியின் 17 வயது மகளுக்கும், நரியம்பட்டி அண்ணாதுரை மகன் தினேஷுக்கும்(26) கடந்த டிசம்பா் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தில் சிறுமிக்கு உடன்பாடு இல்லாத நிலையில், அவரது பெற்றோா் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனராம்.

கடந்த 6 மாதமாக கணவருடன் சோ்ந்து வாழ விருப்பமில்லாத சிறுமி, கடந்த 14-ஆம் தேதி குழந்தைத் திருமண தடுப்புப் பிரிவினருக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, விசாரணை நடத்திய குழந்தை திருமணத் தடுப்பு பிரிவு விரிவாக்க அலுவலா் கண்ணம்மாள் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் சோ்த்த மகளிா் போலீஸாா், கட்டாயத் திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை வெள்ளைச்சாமி(50), தாய் தனம் (40), சிறுமியை திருமணம் செய்த தினேஷ் அவரது பெற்றோா் அண்ணாதுரை(50), ஈஸ்வரி(40) ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்தனா். தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.