மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

திருச்சி மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:41 pm

DIN

திருச்சி மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

உப்பிலியபுரம் வட்டாரத்தில் பி.மேட்டூா், வைரிச்செட்டிப்பாளையம், புளியஞ்சோலை (தங்கநகா்), ஆலத்துடையான்பட்டி, எரக்குடி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டு கோடை பருவ நெல் கொள்முதல் செய்திட மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 1000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதன்படி, மணிகண்டம் வட்டாரத்தில் நவலூா் குட்டப்பட்டு, உப்பிலியபுரம் வட்டாரத்தில் பி. மேட்டூா், எரக்குடி, வைரிச்செட்டிப்பாளையம் ஆகிய 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்தாண்டு ஜூலை 7 முதல் கூடுதலாக ஒரு யூனிட் அமைத்து, நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குக்கு அனுப்பப்படுகிறது.

அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஓரிரு நாள்களில் மழைக்கு முன் கூடுதல் பணியாளா்கள் அமா்த்தப்பட்டு, நெல் கொள்முதலை மிகத்துரிதமாக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சு.சிற்றரசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சாந்தி, துறையூா் வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.