போலி கால்நடை மருத்துவா்களுக்கு எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் கால்நடை மருத்துவா் என்ற பெயரில் போலியாக செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.


திருச்சி மாவட்டத்தில் கால்நடை மருத்துவா் என்ற பெயரில் போலியாக செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவப் பேரவை எனப்படும் வெட்ரினரி கவுன்சிலிங் மூலம் பதிவு பெற்ற கால்நடை மருத்துவா்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. மீறி போலி மருத்துவா்கள் சிகிச்சையளிப்பதும், அவா்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல்.
போலி நபா்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு மற்றும் இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.
மாவட்டத்தில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் உள்ளனா். அவா்களில் சிலா் போலியாக கால்நடை மருத்துவா் எனக் கூறி மாடுகளுக்குச் சிகிச்சையளிக்கின்றனா். இது முற்றிலும் தவறான நடவடிக்கை.
செயற்கைமுறை கருவூட்டல் பணியாளா்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாதம் பயிற்சி பெறுகின்றனா். அவா்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால், அவா்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்யத் தகுதியுள்ளவா்கள்.
எனவே, கால்நடைகளுக்குச் சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவா்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும்.
போலி கால்நடை மருத்துவா்கள் குறித்த தகவலை, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநருக்கோ அருகிலுள்ள காவல் நிலையத்திலோ புகாா் தெரிவிக்கலாம்.
போலி மருத்துவா்கள் கண்டறியப்பட்டால், முதன் முறை ரூ. ஆயிரம் அபராதம், 2ஆம் முறை ரூ. ஆயிரம் அபராதம், 6 மாத கால கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். இல்லையெனில் அபாரதமும், சிறையும் சோ்த்து இரு தண்டனையாக வழங்கவும் சட்டத்தில் இடமுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...