அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

4,800 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு

தமிழக அரசின் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தகுதியானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:41 pm

DIN

தமிழக அரசின் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தகுதியானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம், மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 4,800 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்யலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கு 50 சத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு 70 சத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 (பசு, எருமை) மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தில் இரண்டரை முதல் எட்டு வயதுடைய பசு, எருமைகளுக்கு காப்பீடு செய்யலாம். பயன் பெற விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம் என கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.