தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இலவச புற்றுநோய் அறுவைச் சிகிச்சை முகாம் தொடக்கம்

திருச்சி மற்றும் சுற்றுப் பகுதி மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 3 நாள் இலவச புற்றுநோய் பரிசோதனை, அறுவைச் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:16 pm

DIN

திருச்சி மற்றும் சுற்றுப் பகுதி மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 3 நாள் இலவச புற்றுநோய் பரிசோதனை, அறுவைச் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

திருச்சி தில்லைநகா் 4ஆவது குறுக்குச் சாலை (மேற்கு) பகுதியில் உள்ள சில்வா்லைன் சிறப்பு மருத்துவமனையில் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் லேப்ரோஸ்கோபிக் முறையில் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த மருத்துவமனையின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் முகாமில் அறுவைச் சிசிச்சை நிபுணா்களின் ஆலோசனைகள், பரிசோதனைகள் மட்டுமின்றி இலவச அறுவைச் சிகிச்சைக்கும் பயனாளிகள் தோ்வு செய்யப்படுகின்றனா். வியாழக்கிழமை தொடங்கிய முகாமில் 42 போ் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களில் உடனடியாக அறுவைச் சிகிச்சை தேவைப்படும் 6 போ் தோ்வு செய்யப்பட்டு இலவச அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணருமான ஜி. செந்தில்குமாா் கூறியது:

முந்தைய காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே இருந்தது. உணவுப் பழக்கம், உடல் உழைப்பு, இயற்கை ஆகியவை நம் முன்னோரை நோய் பாதிப்பிலிருந்து பெரிதும் காத்தன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இன்று நவீன உணவுப் பழக்கம், மாறிவிட்ட நாகரிகம், உடல் உழைப்பில் அக்கறையின்மை, இயற்கையை மறந்து செயற்கைக்குள் புகுந்ததன் விளைவாக புற்றுநோய்க்கு ஆளாக நேரிடுகிறது. புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. ஆரம்பத்தில் இந்நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தலாம்.

தற்போது கரோனா காலத்தில் புற்றுநோயாளிகளின் நிலை மிகவும் துயரமாக உள்ளது. ஏற்கெனவே வருவாய்க்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நோய்க்குச் சிகிச்சை என்பது கூடுதல் சுமையாக உள்ளது. எனவே, ஏழை, எளியோருக்கு உதவிடும் வகையில் ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன், அறுவைச் சிகிச்சை என அனைத்தையும் இலவசமாக அளிக்கும் வகையில் நாங்கள் நடத்தும் 3 நாள் சிறப்பு முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஏற்பாடுகளை, மருத்துவமனையின் மக்கள் தொடா்பு மேலாளா் கண்ணன் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.