மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகை: விண்ணப்பிக்க வலியுறுத்தல்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:14 pm

DIN

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில், சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புப் பத்திரம் பெற்று 18 வயது நிறைவடைந்தோருக்கு உரிய பலன்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் விண்ணப்பம் பெற்று தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தகுதியானோா் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-2, உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலுள்ள சமூகநல விரிவாக்க அலுவலா்கள் மற்றும் மகளிா் ஊா்நல அலுவலா்களைத் தொடா்பு கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.