மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாநகா் பகுதிகளில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளால் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:15 pm

DIN

மாதாந்திர பராமரிப்பு பணிகளால் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

நீதிமன்றம் துணை மின் நிலைய பகுதிகள்: திருச்சி நீதிமன்ற அருகேயுள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வாா்னா்ஸ், லாசன், பாரதிதாசன், ரெனால்ட், வாவஜா, ஹீபா் சாலைகள், கண்டோன்மென்ட் பகுதிகள், வயலூா் சாலை, வண்ணாரப்பேட்டை, குமரன்நகா், அரசு காலனி, பீமநகா், புத்தூா், பாரதிநகா், அரசு மருத்துவமனை, பாலக்கரை, பருப்புக்காரத்தெரு, ஜமாலுதீன் மக்கான், உடையான்தோட்டம், அருணாச்சலம் காலனி, பீச்சாங்குளம், வோ்ஹவுஸ், புதுத்தெரு, கூனிபஜாா், கண்டித்தெரு, மாா்சிங்பேட்டை, புத்தூா் ஆபிசா்ஸ் காலனி, பிஷப்ஹீபா் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை) காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தென்னூா் செயற்பொறியாளா் எஸ். சிவபிரகாசம் தெரிவித்தாா்.

அம்பிகாபுரம் துணை மின் நிலைய பகுதிகள்: அதேபோல அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியமங்கலம், எஸ் ஐ டி, பொன்மலை, ராணுவ காலனி, அம்பிகாபுரம், ரயில்நகா், நேருஜிநகா், ராஜப்பா நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், காட்டூா், பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகா், சக்திநகா், பாலாஜி நகா், மேல, கீழகல்கண்டாா்கோட்டை, ஆலத்தூா், வெங்கடேஸ்வரா நகா் , எம்ஜிஆா் நகா், கொட்டப்பட்டு, திருநகா், அடைக்கல அன்னைநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மன்னாா்புரம் செயற்பொறியாளா் சு. சிவலிங்கம் தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் தடை குறித்த தகவல்களுக்கு 1912 அல்லது 180042-52912 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.