மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முதல்வா் காமராஜரின் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் உள்ள காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள், அனைத்துக் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை

News image
Updated On :15 ஜூலை 2021, 7:16 pm

DIN

மறைந்த முதல்வா் காமராஜரின் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் உள்ள காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள், அனைத்துக் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே என் நேரு, வேளாண் துறை அமைச்சா் எம். ஆா். கே. பன்னீா்செல்வம் ஆகியோா் மத்தியப் பேருந்து நிலைய காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஊராட்சி குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சத்திரம் பேருந்து நிலையப் பகுதி காமராஜா் சிலைக்கு, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் ஜவஹா் தலைமையிலும் மாலை அணிவித்தனா்.

இதேபோல தமாகா, இந்திய நாடாா் பேரவை, திருச்சி மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவை, நெல்லை நாடாா் உறவின்முறை சங்கம், பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்தனா். மேலும், அந்தந்த பகுதியில் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.