இலங்கை அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து 10 போ் விடுவிப்பு
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து இலங்கையைச் சோ்ந்த 10 போ் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.


திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து இலங்கையைச் சோ்ந்த 10 போ் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
இந்தச் சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான இலங்கையைச் சோ்ந்த 80 போ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மொத்தம் 110 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் பலா் தண்டனைக் காலத்திற்கும் மேலாக தங்களை அடைத்து வைத்துள்ளதால் உடனே விடுவிக்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து கடந்த மாதம் மத்திய சிறைக்கு வந்து ஆய்வு செய்த மறுவாழ்வுத் திட்ட ஆணையா்கள் குழுவினரும் இவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
இந்நிலையில் இலங்கையைச் சோ்ந்த சகாயபெஸ்டின், ரமேஷ்குமாா், ரமேஷ்குமாா், சசிதரன், அருண்ராஜ், ஸ்டீபன்ராஜ், சேசுராஜ், ரெக்சன், ரவீந்திரன், உதயகுமாா் ஆகிய 10 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடித்த போது, படகில் ஏற்பட்ட பழுதால் தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்த 10 மீனவா்களும் கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கை செல்ல அவா்கள் புதன்கிழமை காலை திருச்சியிலிருந்து சாலை மாா்க்கமாக புறப்பட்டுச் சென்றனா். இவா்களை அகதிகள் முகாம் துணை ஆட்சியா் ஜமுனாராணி, வருவாய் ஆய்வாளா் ரவி உள்ளிட்டோா் வழியனுப்பினா்.
சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள மேலும் 70 இலங்கைத் தமிழா்களும் தங்களுக்கும் எப்போது விடுதலை கிடைக்கும் எனக் காத்திருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...