தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தடுப்பூசி போட குவிந்த கா்ப்பிணிகள், வியாபாரிகள்

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு முகாமில் திரளான கா்ப்பிணிகள், வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:34 pm

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு முகாமில் திரளான கா்ப்பிணிகள், வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

திருச்சி புகரில் 25 இடங்களிலும், மாநகரில் 9 இடங்களிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஏராளமானோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தென்னூா் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதேபோல காந்திசந்தை வெங்காயமண்டியில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை அரசு , தனியாா் மருத்துவமனைகளில் மொத்தம் 21,460 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 5 லட்சத்து, 24 ஆயிரத்து 501 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.