தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநகரில் ஒரே நாளில் 116 போலீஸாா் பணியிட மாற்றம்

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 116 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:14 pm

DIN

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 116 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பல்வேறு துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனா்.

அந்த வகையில், மாநகரில் ஒரே காவல் நிலையத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது. மேலும் கஞ்சா மற்றும் லாட்டரி விற்கத் துணைபோகும் போலீஸாா் குறித்த விவரங்களும் திரட்டப்பட்டு வந்தன.

இறுதியாக கிடைத்த தகவல்களின்பேரில், திருச்சி மாநகரில் பணியாற்றிய 27 சிறப்பு ஆய்வாளா்கள் உள்பட 116 பேரை ஒரே நாளில் பணியிட மாற்றும் செய்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.

இந்த போலீஸாா் பணி ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை முதல் பணியாற்றுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.