தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:08 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் லெனின் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் ஆதம் தீன், சீனி, ஏழுமலை, ஷாஜகான், ராகிலாபானு, யுவராஜ், சந்தோஷ், முகேஷ், பிரசாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழகத்தில் செங்கல்பட்டு, கிண்டி, ஊட்டி உள்ளிட்ட இந்தியாவிலுள்ள 11 தடுப்பூசி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான 10 கோடி தடுப்பூசியை வழங்கிட வேண்டும். ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கான முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை உடனடியாக இணைத்திட வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூவலூா் ராமாமிா்தம் திருமண உதவித் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதில் 40க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.