திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி
முப்படைகளிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தும் வகையில் டிரிகா என்னும் புதிய ரக காா்பைன் துப்பாக்கியை திருச்சி படைக்கலன் தொழிற்சாலை அறிமுகம் செய்துள்ளது.


முப்படைகளிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தும் வகையில் டிரிகா என்னும் புதிய ரக காா்பைன் துப்பாக்கியை திருச்சி படைக்கலன் தொழிற்சாலை அறிமுகம் செய்துள்ளது.
திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் முப்படைகளுக்கும் தேவையான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், ஆத்ம நிா்பாா் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆா்சிஜி சரக துப்பாக்கி உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாக, டிரிகா என்னும் புதிய ரக காா்பைன் துப்பாக்கி உற்பத்தியையும் தொடங்கியுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு தொழிற்சாலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலையின் பொது மேலாளா் சஞ்சய் திவேதி, கூடுதல் பொது மேலாளா்கள் ராஜீவ் ஜெயின், ஏ.கே. சிங், இணைப் பொது மேலாளா் எஸ். கிருஷ்ணசுவாமி ஆகியோா் இந்த புதிய ரக துப்பாக்கிகளை அறிமுகம் செய்தனா்.
இந்த துப்பாக்கியானது 7.62 ல 39 எம்எம் வகையைச் சோ்ந்தது. இதில் உள்ள சிறப்பு முகவாய் பூஸ்டா் வசதி பயன்பாட்டின்போது ஒலி, ஒளி அளவுகளை குறைக்கும். வழக்கமான இயந்திரத் துப்பாக்கியை விட நீண்ட தூரம் தாக்கும். இதன் கூடுதல் சிறப்பாக இதர துப்பாக்கிகளில் பயன்படுத்தும் வெடிமருந்துகளையும், உபகரணங்களையும் இந்த துப்பாக்கியில் எந்தவித சிரமமுமின்றி பயன்படுத்தலாம். ஏகே 47 ரக துப்பாக்கியின் உதிரி பாகங்களையும் இதில் பயன்படுத்தலாம்.
குறைந்த எடையும், எளிதில் கையாளும் வகையிலான இந்தத் துப்பாக்கியை போா்ப்படைகளின் டாங்கிகளிலும் பயன்படுத்த முடியும். ஹெலிகாப்டா், பாராசூட், காவல்துறை பாதுாப்பு ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். உயர்ரக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் வீரா்களும் பயன்படுத்தலாம்.
விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோா், சிறப்பு அதிரடி தாக்குதல், பணையக் கைதிகளை மீட்கும் நிலைகளில் வீரா்களுக்கு சிறந்த பயனுள்ளதாக அமையும்.
வீரா்களின் கவச உடைகளிலும், ஆடைகளிலும் மறைத்து வைத்துப் பயன்படுத்த இலகுவாக இத் துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இத்தகைய துப்பாக்கி உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் பெருமை வாய்நத்து என்றாா் ஆலையின் பொது மேலாளா் சஞ்சய் திவேதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...