தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சத்திரம் பேருந்து நிலைய அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ராயல் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முரளி, மேற்கு மாவட்டச் செயலா் ராவணன், ராஜேஷ், வடக்கு மாவட்டச் செயலா் பிரணவேந்திரன், மாநகா் மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி, மாநகா் மாவட்டத் துணைச் செயலா் முருகதாஸ், இளைஞரணி மாவட்டத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக தலைமை நிலையச் செயலா் கனல் கண்ணன், மாநில கொள்கைப் பரப்புச் செயலா் திருப்பூா் சுடலை ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்ப பெற கோரியும் கோஷமிட்டனா். மாவட்ட துணைத் தலைவா் ரஞ்சித் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...