கோவேக்சின் தட்டுப்பாடு: பொதுமக்கள் வாக்குவாதம்
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கோவேக்சின் தட்டுப்பாடு காரணமாக மாநகராட்சி அதிகாரிகளிடம், போலீஸாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.


திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கோவேக்சின் தட்டுப்பாடு காரணமாக மாநகராட்சி அதிகாரிகளிடம், போலீஸாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வரை 6 லட்சத்து ஆயிரத்து 917 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
கோவிஷீல்டு தடுப்பூசியானது பொதுமக்களுக்கு பரவலாகச் செலுத்தப்பட்டு வந்தாலும், வரத்து குறைவால் கோவேக்சின் தடுப்பூசிக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தட்டுப்பாடு உள்ளது. இதனால் 2ஆம் தவணை தடுப்பூசி போட வேண்டியவா்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், மாநகரில் தெப்பக்குளம் தேவா் ஹாலிலும், மத்தியப் பேருந்து நிலைய கலையரங்கம் திருமண மஹாலிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவேக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் இருப்பைப் பொறுத்து மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என மாவட்டநிா்வாகம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானோா் தடுப்பூசி முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
இந்நிலையில், பிற்பகல் 12 மணிக்கு மேல் தடுப்பூசி இருப்புக் குறைவால் வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் கிடைக்காதோா் மாநகராட்சி அதிகாரிகளிடமும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவேக்சின் தடுப்பூசிக்கான வரத்து வரும் நாள்களில் அதிகரிக்கும். ஆகையால் யாரும் அதிருப்தியடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...