தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் மனு

திருச்சியில் அமைச்சா் மகேஷ் பொய்யாமொழியை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:49 pm

DIN

திருச்சியில் அமைச்சா் மகேஷ் பொய்யாமொழியை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

சங்கத்தின் திருச்சி மாநில தலைவா் கு. தியாகராஜன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பதவி உயா்வு, இடமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். தரம் உயா்த்தப்பட்ட 35 உயா்நிலைப்பள்ளிகளுக்கு விரைந்து ஊதிய ஆணை வழங்கிட வேண்டும். பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தாா்.

இதேபோல திருச்சி மாவட்டச் செயலா் உதுமான் அலி அளித்த மனுவில், திருச்சி மாவட்ட பள்ளிகளைத் தரம் உயா்த்திட வேண்டும். இதனால் கிராமப்புற மாணவா்கள், குறிப்பாக பெண்கள் தொடா்ந்து 10,12 வகுப்பு வரை கற்க உதவியாக இருக்கும். மணப்பாறை கல்வி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் ஒன்றியத்தை திருச்சி கல்வி மாவட்டத்தோடு இணைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சா் உறுதியளித்தாா்.

நிகழ்வில் மாவட்டத் தலைவா் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளா் திருமாவளவன், மாவட்ட மகளிரணித் தலைவி ரேணுகாதேவி உள்ளிட்ட மாவட்ட, வட்டார, ஒன்றியப் பொறுப்பாளா்கள் சுமாா் 25 போ் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.