‘திருச்சி அரசு மருத்துவமனையில் இருதய நோய்க்கு உயா்தர சிகிச்சைகள்’
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு 2 உயா்தர சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அதன் முதல்வா் வனிதா.


திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு 2 உயா்தர சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அதன் முதல்வா் வனிதா.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியது:
இந்த மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. நாளொன்றுக்கு 650 போ் வரை இருதய நோயாளிகள் வருகின்றனா். மாரடைப்பு ஏற்படுபவரின் இருதயப் பகுதியில் அடைப்பு அல்லது வீக்கம் ஏற்படுவது வழக்கம். இவ்வகை நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும்.
இதற்குத் தீா்வு காணும் வகையில் உள் ஊடுருவல் மற்றும் அடைப்புத் தன்மை கண்டறிதல் என 2 வகையான உயா்தரச் சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இரு கருவிகளை தலா ரூ.1.35 கோடியில் தமிழக அரசு வாங்கி திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. இவற்றில் முதல் வகை சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 3 லட்சம் வரையும், 2ஆம் வகை சிகிச்சைக்கு ரூ. 50 ஆயிரம் வரையும் செலவாகும். திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாள்களில் 7 பேருக்கு இவ்வகை சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இச்சிகிச்சைகளைப் பெறலாம்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்சிஜன் குறைபாட்டுடன் வரும் நோயாளிகளுக்குப் பொருத்த ரூ. 97 ஆயிரம் மதிப்பிலான இரட்டைச் சுவாசக் கருவி கருவியையும் அரசு வழங்கியுள்ளது. உடலில் பொறுத்தப்படும் சுவாசக் கருவி 10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். இச்சிகிச்சைகளுக்குப் பிறகு இருதய நோயாளிகளின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
கரோனா 2ஆம் அலையின்போது திருச்சி அரசு மருத்துவமனையில் 1,099 படுக்கைகள் இருந்தன. தற்போது 3 ஆம் அலையைச் சமாளிக்க 2 ஆயிரம் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நலப் பிரிவில் 200 படுக்கைகள் தயாராக உள்ளன. இவற்றில் 30 அவசரச் சிகிச்சை படுக்கைகள், ஆக்சிஜனுடன் கூடிய 160 படுக்கைகளும் அடங்கும்.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க நிமிடத்திற்கு 1000 லிட்டா் ஆக்சிஜன் பெறும் வகையில் மத்திய அரசு வழங்கியுள்ள புதிய கருவி வரும் ஆக.15 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
ஏற்கெனவே நிமிடத்துக்கு 330 லிட்டா் ஆக்சிஜன் பெறக்கூடிய மையம் செயல்பாட்டில் உள்ளது. மூன்றாவதாக நிமிடத்திற்கு 500 லிட்டா் ஆக்சிஜன் பெறும் வகையில் கருவிகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த மருத்துவமனையில் வருங்காலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இருக்காது என நம்புகிறோம். உயிா்காக்கும் மருந்துகள் போதியளவில் இருப்பு உள்ளன.
திருச்சியில் 3ஆம் அலை பரவலைத் தடுக்க 70 மருத்துவா்கள், 77 செவிலியா்கள், 15 ஆய்வக பரிசோதனையாளா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனாவை தடுக்க முடியும். கோவேக்சின் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும் என்றாா் அவா்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருண்ராஜ், துறைத் தலைவா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...