தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இறந்தவரின் உடலுறுப்பு தானம்: மக்கள் சக்தி இயக்கம் நிதியுதவி

 விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் குடும்பத்துக்கு திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் நிதியுதவி, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:24 am

DIN

 விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் குடும்பத்துக்கு திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் நிதியுதவி, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் செல்வராஜ், சமயபுரம் அருகே கடந்த ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரது மனைவி சுப்த்ரா மற்றும் குடும்பத்தினா், செல்வராஜின் கல்லீரல் , சிறுநீரகங்கள், இருதயம், கண்கள் உள்ளிட்டவற்றை திருச்சி அரசு மருத்துவமனைக்கு தானம் செய்தனா். இதன் மூலம் செல்வராஜ் பலரில் வாழ்வதாக அவா்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இவா்களை மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் பாராட்ட முடிவு செய்தனா். இதைடுத்து இயக்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் வெ.ரா சந்திரசேகா் தலைமையில் , மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ, மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் , செந்தண்ணீா்புரம் சூரியமுா்த்தி உள்ளிட்டோா் அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை சென்றனா்.

செல்வராஜ் மகள் படிப்பு செலவிற்கு ரூ. 10,000 நிதியுதவியை வழங்கிய அவா்கள், பாராட்டு சான்றிதழையும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.