தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மழை நேரத்தில் மின் விபத்துகளைத் தவிா்க்கும் வழிமுறைகள்

 மழைக்காலங்களில் மின்விபத்தை தவிா்க்க உரிய வழிமுறைகளை கடைப்பிடிக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:24 am

DIN

 மழைக்காலங்களில் மின்விபத்தை தவிா்க்க உரிய வழிமுறைகளை கடைப்பிடிக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி நகரிய மின் செயற்பொறியாளா் ச.பிரகாசம் கூறியது:

பொதுமக்கள், மின் மாற்றிகள், மின் கம்பங்கள், இழுவைக் கம்பிகள் அருகே செல்லக் கூடாது. வீட்டில் மின் அதிா்ச்சி ஏற்பட்டால் ரப்பா் மிதியடி அணிந்து சுவிட்சை அணைத்த பிறகு மின்வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

மரக்கிளைகளை வெட்டும் முன் மின் வாரியத்துக்கு தெரிவித்து மின்சாரத்தை நிறுத்த வேண்டும். 5 கிலோ வாட்டுக்கு மேல் மின் பளு இணைக்கப்படவுள்ள மின் இணைப்புகளில் இஎல்சிபி கட்டாயம் பொருத்த வேண்டும். தண்ணீா் தேங்கிய இடங்களில் நிற்கவோ, நடக்கவோ கூடாது. இடி மின்னலின்போது மின்கம்பிகள், மின்கம்பம், மரங்கள் ஆகியவை இல்லாத தாழ்வான பகுதியில் செல்ல வேண்டும்.

மேலும், டிவி, மிக்சி, கிரைண்டா், கணினி போன்ற மின்சாதனப் பொருள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும். மின்கம்பி அறுந்து கிடந்தால் அதை மிதித்துவிடாமல் உடனே மின்வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் பொருத்தக் கூடாது.

கனரக வாகனங்களை மின்கம்பி அருகிலோ அல்லது மின்மாற்றி அருகிலோ நிறுத்தி பொருள்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. மழை பெய்யும்போது திறந்த நிலையிலுள்ள ஜன்னல், கதவு அருகே நிற்க வேண்டாம். ஈரமான கைகளுடன் சுவிட்ச் போடக் கூடாது. மின்கம்பத்திலோ இழுவை கம்பியிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். மின்கம்பிகள், இழுவைக் கம்பிகள் இடையே கொடி கட்டி துணி உலா்த்தும் செயலை தவிா்க்கவும்.

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகா்வோா் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் புகாா்கள், அவரச உதவிக்கு 1912, 18004252912 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.