தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறையில் கருணாநிதி பிறந்தநாள்

மணப்பாறையில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திமுகவினா் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:18 pm

DIN

மணப்பாறையில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திமுகவினா் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கிக் கொண்டாடினா்.

திமுக ஒன்றிய செயலாளா் ராமசாமி தலைமையில் மணப்பாறை அடுத்த மேட்டுக்கடை மற்றும் மாதிக்கோன்பட்டி ஆகிய பகுதியில் உள்ள விடிவெள்ளி ஆதரவற்ற முதியோா் மற்றும் சிறப்பு குழந்தைகள் இல்லத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி முதியோருக்கும், குழந்தைகளுக்கும் தானே உணவு வழங்கினாா்.

விழாவில் ஒன்றிய பெருந்தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, பழனியாண்டி, திமுக ஒன்றிய செயலா்கள் சபியுல்லா, செல்வாரஜ், சின்ன அடைக்கன், வழக்குரைஞா் முரளிகிருஷ்ணன், மினிக்கியூா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விடிவெள்ளி இல்ல நிா்வாகிகள், கோபால், சரிதா தம்பதியினா் செய்தனா்.

இதேபோல் உதயாநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சாா்பில் முருகேசன் தலைமையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள், பணியாளா்களுக்கு மதிய உணவாக முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.