தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறை அருகே தொழிலாளா்கள் மறியல்

மணப்பாறை அடுத்த ஆனையூரில் வேலை வழங்கவில்லை எனக் கூறி 100 நாள் வேலை தொழிலாளா்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:31 pm

DIN

மணப்பாறை அடுத்த ஆனையூரில் வேலை வழங்கவில்லை எனக் கூறி 100 நாள் வேலை தொழிலாளா்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த அமையபுரம் ஊராட்சி ஆனையூரில் 100 நாள் பணியாளா்களுக்கு நிகழாண்டு பணிகள் வியாழக்கிழமை முதல் வழங்கப்படும் நிலையில் வேலை தொடங்கிய 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஒரு குழுவுக்கு மட்டும் வேலை இல்லை எனக்கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மணப்பாறை - கரூா் சாலையில் வேலை செய்யும் உபகரணங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவா் குணசீலன், ஊராட்சித் தலைவா் தேவராஜ், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மணமல்லி ஆகியோா் அளித்த உறுதியையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.